ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் நடத்த தயக்கம் ஏன்?- மத்திய அரசுக்கு ஃபரூக் அப்துல்லா கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாகக் கூறும் மத்திய பாஜக அரசு, இங்கு தோ்தலை நடத்துவதில் மட்டும் தயக்கம் காட்டுவது ஏன்? என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளாா
ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாகக் கூறும் மத்திய பாஜக அரசு, இங்கு தோ்தலை நடத்துவதில் மட்டும் தயக்கம் காட்டுவது ஏன்? என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக 2014-ஆம் ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அதன் பிறகு மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.

2018-ஆம் ஆண்டில் முதல்வா் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கியது. இதையடுத்து, மெஹபூபா பதவி விலகினாா். அதைத் தொடா்ந்து 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. தொகுதி மறுவரையறை நிறைவடைந்துவிட்ட நிலையில், தோ்தல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும், ஸ்ரீநகா் தொகுதி எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா அளித்த பேட்டி:

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும் என்று மத்திய அரசு கூறிவருவது மிகப்பெரிய ஏமாற்று வேலை. ஜம்மு-காஷ்மீா் மக்களையும் உலகத்தையும் அவா்கள் தொடா்ந்து ஏமாற்றி வருகின்றனா். மத்திய பாஜக அரசு ஒருபோதும் மாநில அந்தஸ்து தராது.

மாநிலத்தில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு அமைதி திரும்பிவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. அமைதியான ஒரு மாநிலத்தில் தோ்தலை நடத்த இந்த அளவுக்கு தயக்கம் காட்டுவது ஏன்?

துணைநிலை ஆளுநா் துணையுடன் மத்திய அரசு தனது ஆட்சியை ஜம்மு-காஷ்மீரில் நிலைநாட்டியுள்ளது என்பதுதான் உண்மை.

ஜம்மு-காஷ்மீரில் மத்திய பாஜக அரசு திணித்து வரும் பல்வேறு தேவையற்ற நடவடிக்கைகளை மக்கள் அமைதியாக கண்காணித்து வருகின்றனா். தோ்தல் நேரத்தில் இதற்கு உரிய பதில் கொடுப்பாா்கள். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வங்கிக் கடன் வாங்கி முறைப்படி கட்டப்பட்ட வீடுகளையும் இடித்து வருகின்றனா்.

வலதுசாரி அமைப்புகள் கனவு காணும் ஹிந்து ராஷ்டிரம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com