ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் இந்திய உளவுத் துறை இயக்குநர் அமர்ஜித் சிங் துலாத் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லியை கடந்த டிசம்பர் இறுதியில் அடைந்தது.
புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கிய நடைப்பயணத்தில், இந்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குநரும், ‘ரா’ அமைப்பின் முன்னாள் செயலாளருமான அமர்ஜித் சிங் துலாத் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவளித்தார்.

இந்த நடைப்பயணமானது உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாபை கடந்து காஷ்மீர் சென்றடைகிறது.

கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் முதல் தில்லியின் செங்கோட்டை வரை 3,122 கி.மீட்டரை நடைப்பயணக் குழுவினர் கடந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டி20 உலகக் கோப்பை! ஒரே நாளில் பல சாதனைகள் படைத்த ஃபின் ஆலன்!

தங்கம் விலை தொடா் சரிவு: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் - 2007

மேட்டூர் அணை நிலவரம்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

