உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தில்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள் தாமதம்

தில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, ரயில்கள் தாமதம் இயக்கப்படுகின்றன என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

Published On :

தில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, ரயில்கள் தாமதம் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பனிமூட்டம் காரணமாக தில்லிக்கு செல்லும் 21 ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக வந்ததாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தில்லியில் நிலவும் கடும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாக திங்கள்கிழமை இரவு 5 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டதாக சர்வதேச விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

அதிவிரைவு ரயில், பிரிமியம் ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை நகரின் சில பகுதிகளில் ஏற்பட்ட  பனிமூட்டம் காரணமாக  வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கடும் பனிமூட்டத்தால், ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜன.11-ல் துணிவு?

அடுத்த 2 நாள்களுக்கு தில்லியில் மிதமான முதல் கடுமையான பனி நிலவும் என்றும், இந்த வார இறுதியில் பனியின் பாதிப்பு குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.