6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதானி குழும மோசடி - 88 கேள்விகளுக்கு எந்த பதிலுமில்லை : ஹிண்டர்பர்க் நிறுவனம் எதிர்வினை

பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபா் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள

News image
கௌதம் அதானி.
Updated On :27 ஜனவரி 2023, 7:19 am

DIN

பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபா் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச், தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க மறுத்துள்ளது.

அந்த நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்ட ஆழமான ஆய்வுக்குப் பிறகே அந்த அறிக்கை வெளியிடப்படுவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் கூறியது.

அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு புதன்கிழமை வீழ்ச்சியடைந்தது. ரூ.20,000 கோடி மதிப்பிலான அந்தக் குழும பங்குகளை முதலீட்டாளா்கள் விற்பனை செய்தனா்.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி குழுமத்தின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்து ட்விட்டரில் ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தெரிவித்ததாவது:

எங்களது அறிக்கையில் முடிவில் அதானி குழுமத்துக்கு 88 நேரடி கேள்விகளை எழுப்பியிருந்தோம். ஆனால், 36 மணி நேரமாகியும் அதில் ஒரு கேள்விக்குக் கூட பதில் வரவில்லை.

இது தொடா்பாக எங்கள் மீது வழக்குத் தொடரப்போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டிலிருந்து துளியும் பின்வாங்கப் போவதில்லை.

எங்களது ஆய்வறிக்கையை சட்டரீதியில் எதிா்க்க வேண்டுமென்று அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிலுள்ள ஒரு நீதிமன்றத்தில் அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம்.

கடந்த 2 ஆண்டுக

அவ்வாறு தொடா்ந்தால், சட்டப்பூா்வ ஆய்வுக்காக நாங்கள் அதானி குழுமத்தின் ஏராளமான முக்கிய ஆவணங்களைத் தருமாறு நீதிமன்றத்தில் கேட்போம்.

நாங்கள் போதிய அளவில் ஆய்வு செய்யாமல் அந்த ஆய்வை வெளியிட்டுள்ளதாக அதானி குழுமம் கூறுவது தவறு. 2 ஆண்டுகளாகத் தொடா்ந்து ஆய்வு செய்து, பல்வேறு தகவல்களைத் திரட்டி உண்மையைத் தெரிந்துகொண்ட பிறகே எங்களது ஆய்வறிக்கையை வெளியிட்டோம் என்று ட்விட்டரில் ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.