யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உத்தர பிரதேசம்: விபத்தில் சிக்கிய சிறைத்துறை அமைச்சர் கார்

உத்தர பிரதேச சிறைத்துறை அமைச்சர் சுரேஷ் ரஹி சென்ற கார், டிராக்டர் டிராலி மீது மோதியதில் அவர் காயமின்றி தப்பினார். 

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜனவரி 2023, 3:16 am

DIN

உத்தர பிரதேச சிறைத்துறை அமைச்சர் சுரேஷ் ரஹி சென்ற கார், டிராக்டர் டிராலி மீது மோதியதில் அவர் காயமின்றி தப்பினார். 

உத்தர பிரதேச மாநில சிறைத்துறை அமைச்சர் சுரேஷ் ரஹி லக்னௌவில் இருந்து தியோரியாவுக்கு காரில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய கார் கோரக்பூர் என்ற இடத்தில் டிராக்டர் டிராலி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

எனினும், இந்த விபத்தில் அமைச்சர் ரஹி காயமின்றி உயிர் தப்பினார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேசமயம் அமைச்சரின் கார் சேதமடைந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதன் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.