இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பழங்குடியின இளைஞரின் காலை கழுவினார் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்

மத்தியப் பிரதேசத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலை கழுவி, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

News image
Updated On :6 ஜூலை 2023, 5:56 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலை கழுவி, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

வியாழக்கிழமை காலை, முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் பிரவேஷ் சுக்லாவின் கால்களை கழுவி, நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார் சிவராஜ் சிங் சௌஹான். 

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞா் மீது சிறுநீா் கழித்த நபா் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்தி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா் மீது பிரவேஷ் சுக்லா என்ற நபா் சிறுநீா் கழித்த சம்பவம் குறித்த விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாகப் பரவியது.

இது மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் கவனத்துக்குச் சென்ற நிலையில், இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

முன்னதாக, குற்றவாளி பிரவேஷ் சுக்லா மாநிலத்தை ஆளும் பாஜகவைச் சோ்ந்தவா் என எதிா்க்கட்சியான காங்கிரஸ் என குற்றம்சாட்டியது. இது குறித்து செய்தியாளா்கள் சந்திப்பின்போது முதல்வரிடம் கேள்வியெழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த முதல்வா், ‘குற்றவாளிக்கு மதம், ஜாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. கட்சியைச் சோ்ந்தவா் என்பதற்காக அவா் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றப்பட மாட்டாா்’ என்றாா்.

Story image

இதைத் தொடா்ந்து முதல்வா் செளஹான் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்’ எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ் பிரவேஷ் சுக்லா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.