பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள்: ம.பி.முதல்வர் 

மத்தியப் பிரதேசத்தில் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியப் பிரதேசத்தில் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.  

மாநில தலைநகர் போபாலில் உள்ள மோதிலால் நேரு அரங்கத்தில் பெண் காவலர்கள் 250 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவதின் முக்கிய காரணம் அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். பெண் காவலர்கள் இருசக்கர வாகனத்தின் உதவியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மேலும் பெண்களின் சுய மரியாதையையும் பாதுகாப்பார்கள். 

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக மாநில அரசால் பல திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை உருவாக்கிய முதல் மாநிலம் மத்தியப் பிரதேசம் என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com