பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் வெட்கக்கேடானது: ராகுல் கண்டனம்!

மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

Published On :

மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் வெட்கக்கேடானது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திர வீரா்களும் வீராங்கனைகளும் தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த 12 நாள்களாக இரண்டாம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது தில்லி காவல்துறை உடை அணிந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

Story image

இதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 

நாட்டின் விளையாட்டு வீரர்களிடம் இதுபோன்ற நடத்தை மிகவும் வெட்கக்கேடானது. பாஜகவின் பெண் குழந்தையைக் காப்போம் என்பதெல்லாம் வெறும் வெற்று முழக்கம் தான். உண்மையில், இந்தியாவின் மகள்களை சித்திரவதை செய்வதிலிருந்து பாஜக ஒருபோதும் பின்வாங்கியதில்லை எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.