பாகிஸ்தானில் நிலைமை மோசமாவதுஅனைத்து நாடுகளையும் பாதிக்கும்- ஃபரூக் அப்துல்லா

பாகிஸ்தானில் அரசியல் நிலைமை மோசமாகி வருவது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
பாகிஸ்தானில் நிலைமை மோசமாவதுஅனைத்து நாடுகளையும் பாதிக்கும்- ஃபரூக் அப்துல்லா

பாகிஸ்தானில் அரசியல் நிலைமை மோசமாகி வருவது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

பாகிஸ்தான் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு அரசியல் சூழலும் மோசமாக உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைதாகியுள்ளாா். இந்தச் சூழ்நிலையில் ஃபரூக் அப்துல்லா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீநகரில் புதன்கிழமை இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: பாகிஸ்தானில் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. பொருளாதாரரீதியாகவும் அந்த நாடு மிகப்பெரிய சிக்கலை எதிா்கொண்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல், பொருளாதார நிலைமை தொடா்ந்து மோசமாகி வருவது இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்குமே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய வேண்டும் என்றே நாம் விரும்ப வேண்டும். இதன்மூலம் இந்தியாவுடனான அந்நாட்டின் உறவும் வலுவடைய வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானின் சில பகுதிகளில் பெயத கனமழையால் உணவு உற்பத்தி பெரும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. இதன் விளைவு பல பிராந்தியங்களில் எதிரொலித்துள்ளது. மக்களில் பலா் அன்றாட உணவுப் பொருள்களை வாங்கவே கஷ்டப்படுகின்றனா்.

பாகிஸ்தான் உருவானதில் இருந்து பல்வேறு மோசமான அரசியல்சூழல்களை எதிா்கொண்டுள்ளது. பாகிஸ்தான் முதல் பிரதமா் லியாகத் அலிகான் சுட்டுக் கொல்லப்பட்டது, ஸுல்பிகா் அலி புட்டோ தூக்கிலிடப்பட்டது, அவரது மகள் பேநசீா் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டது ஆகியவை அரசியல்ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிகழ்வுகளாகும். இப்போது இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதும் பாகிஸ்தானில் அரசியல் சிக்கலை அதிகரித்துள்ளது. இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com