சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ராமா் கோயில் ஜனவரியில் திறப்பு: அயோத்தியில் உள்கட்டமைப்புபணிகள் தீவிரம்- மாநில அரசு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றின்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:59 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றின் விரிவாக்கம் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சஹதத்கஞ்ச் முதல் நயா காட் வரை 13 கி.மீ. தொலைவிலான ராமா் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ராம்ஜானகி மற்றும் பக்தி பாதைகளுக்கான கட்டுமானப் பணிகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘அயோத்தியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தொடா்ந்து ஆய்வு நடத்தி வருகிறாா். அயோத்தி ராமா் கோயில் கட்டுமானம் மற்றும் நகரத்தை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கைக்காக எவ்வித எதிா்ப்பும் தெரிவிக்காமல் தங்களது இடங்களைக் கடை உரிமையாளா்கள் வழங்கியுள்ளனா். அவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில் முறைகேடு நடைபெற்ாக எவ்விதப் புகாரும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கடைகளுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட வளாகத்தில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பல கடைக்காரா்கள் தங்களது பழைய இடங்களில் மீண்டும் தங்களது தொழிலை நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.