மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழிவுப்பாதைக்கு செல்லும்: காங்கிரஸ்!

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழிவுப் பாதைக்கு செல்லும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :9 அக்டோபர் 2023, 7:47 am

DIN

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழிவுப் பாதைக்கு செல்லும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

கேரள சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், 

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரக்கூடாது எனத் திட்டமிட்ட நோக்கத்துடன் காங்கிரஸ் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். 

நரேந்திர மோடி அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் அது நாட்டை அழிவுக்குக் கொண்டுசெல்லும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான் பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற குழுக்களையும் ஒன்றினைத்து போராடக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாடு "தீராத ஆபத்தில்" சென்றுவிடும். நாடு இந்த உண்மையை உணர்ந்துள்ளது, இந்த ஆபத்து தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்து. எனவே, பாஜகவைத் தோற்கடித்து, மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட குழுக்கள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்த முன்னணி உருவாக்கப்பட்டது என்று முதல்வர் கூறினார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக, கட்சியால் கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்திற்காக தேசிய தலைநகருக்கு வந்திருப்பதாக சென்னிதலா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.