யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நிபா வைரஸ் கரோனாவை விட ஆபத்தானது: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

நிபா வைரஸ் கரோனா விட ஆபத்தானது, கரோனாவை விட நிபா வைரஸால் பாதிப்பு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) எச்சரித்துள்ளது. 

News image
Updated On :16 செப்டம்பர் 2023, 5:03 am

DIN


புதுதில்லி: நிபா வைரஸ் கரோனா விட ஆபத்தானது, கரோனாவை விட நிபா வைரஸால் பாதிப்பு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) எச்சரித்துள்ளது. 

கடந்த 2018, 2021 ஆம் ஆண்டுகளில் கேரளம் மாநிலம், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவத் தொடங்கியது.  இதுவரை நிபா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 17 பேர் இறந்துள்ளனர். 

கேரளத்தில் கடந்த ஆகஸ்ட் 30 முதல் இதுவரை 3 பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர். இறந்த மூவரும் தொடர்பில் இருந்துள்ளனர். 

நிபா தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), நிபா வைரஸ் கரோனாவை விட ஆபத்தானது. கரோனாவை விட நிபா வைரஸ் பாதிப்பு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2-3 சதவிகிதம் பேர் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 40-70 சதவிதம் பேர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர். 

மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ராஜீவ் பாஹல் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் கரோனா நோய்த்தொற்றுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். கரோனா தொற்று பாதிப்பு இறப்பு விகிதம் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் வரையில்தான் இருந்தது. ஆனால், நிபாவால் பாதிப்பு இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவிகிதம் வரை உள்ளது என்றார்.

நிபா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்தே அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தான் இந்த தொற்று பரவியுள்ளது.

தற்போது நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. தென் மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாகவும், கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எப்படி தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது தெரியவில்லை. இது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளம் மாநிலம், கோழிக்கோடு பகுதியில் பழம் தின்னும் வௌவால்கள் உடலில் இந்த வைரஸ்கள் உள்ளன. இது நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம் என்பதைக் கண்டறிந்தோம். வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று எவ்வாறு பரவுகிறது என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால் அதனை கண்டுபிடிப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இந்த தொற்று பாதிப்பு எப்பொழுதும் மழைக்காலத்தில் தான் நடக்கிறது.

மேலும், கரோனா தொற்று பாதிப்பின்போது நாம் கடைபிடித்து வந்த கைகழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருத்தல் போன்வற்றை கடைபிடித்து வந்தால் தொற்று பாதிப்பையும், தொற்று பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என ராஜீவ் பாஹல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.