இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சொந்த மாநிலத்தில் கல்வித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

சொந்த மாநிலமான குஜராத்தில் செப்.26,27 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் மோடி அங்கு கல்வித் திட்டங்கள் சிலவற்றையும் தொடங்கி வைக்கிறார். 

News image
Updated On :23 செப்டம்பர் 2023, 7:34 am

DIN

சொந்த மாநிலமான குஜராத்தில் செப்.26,27 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் மோடி அங்கு கல்வித் திட்டங்கள் சிலவற்றையும் தொடங்கி வைக்கிறார். 

மேலும், சோட்டா, உதேபூரில் உள்ள பழங்குடியினர் நகரமான பொடேலியில் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். 

குஜராத்தில் சுவாமி விவேகானந்த ஞான சக்தி உறைவிடப் பள்ளிகள், ரக்ஷா சக்தி பள்ளிகள், ஞான சேது மெட்ரிக் உதவித்தொகை போன்ற கல்வி சார்ந்த திட்டங்களையும் அவர் தொடக்கிவைக்கிறார். 

பொடேலியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டுவார் எனத் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறைச் செயலர் வினோத் ராவ் தெரிவித்தார். இந்த திட்டங்கள் மாநிலம் முழுவதும் புதிய வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கணினி ஆய்வகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் 35,133 அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.