தெலங்கானா மாநில சட்டப்பேரவை உறுப்பினராக முதல்வர் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார். 
தெலங்கானா மாநில சட்டப்பேரவை உறுப்பினராக முதல்வர் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார். 

தெலங்கானா எம்எல்ஏக்கள் பதவியேற்பு! புறக்கணித்த பாஜக!!

தெலங்கானா மாநில சட்டப்பேரவை உறுப்பினராக முதல்வர் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார். 

தெலங்கானா மாநில சட்டப்பேரவை உறுப்பினராக முதல்வர் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார். 

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா பேரவைத் தேர்தலில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியை (பிஆா்எஸ்) வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். காங்கிரஸ் 64, பிஆா்எஸ் 39, பாஜக 8, மஜ்லிஸ் கட்சி 7 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஓரிடத்தைக் கைப்பற்றின. 

இதன்பின்னர் ஹைதராபாத்தின் எல்.பி. மைதானத்தில் டிச. 7 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக ரேவந்த் ரெட்டி, துணை முதல்வராக விக்ரமா்கா, அமைச்சா்களாக உத்தம் குமாா் ரெட்டி, கோமடிரெட்டி வெங்கட ரெட்டி, சி.தாமோதா் ராஜநரசிம்மா, டி.ஸ்ரீதா் பாபு, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பொன்னம் பிரபாகா், கொண்டா சுரேகா, டி.அனுசுயா, தும்மலா நாகேஸ்வர ராவ், ஜுபள்ளி கிருஷ்ண ராவ் ஆகியோா் பதவியேற்றனா். அவா்களுக்கு ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா். 

இதையடுத்து, எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்கும் பொருட்டு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக அனைத்திந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஒவைஸி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். அப்போது முதல்வர் ரேவந்த் ரெட்டியும் உடனிருந்தார். 

தற்காலிக அவைத் தலைவராக அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்பு
தற்காலிக அவைத் தலைவராக அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்பு

தற்காலிக அவைத் தலைவர் முன்னிலையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் எம்எல்ஏக்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். 

பாஜக எம்எல்ஏக்கள் இன்றைய பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளனர். 

எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்ற பின்னர், புதிய சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com