
கோப்புப்படம்
மங்களூருவில் போதைப்பொருள் வழக்கில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கை செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- தில்லியில் காங்கிரஸ் தலைவருடன் சித்துவின் மனைவி சந்திப்பு
மேலும் கைதானவர்களில் தலா இரண்டு மருத்துவ மாணவர்கள், உத்தர பிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள்.
முன்னதாக அண்மையில் போதைப்பொருள் வழக்கில் 10 பேரை மங்களூரு காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...