சென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

இந்தியாவில் ஹைப்பா்லூப் ரயில்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை: நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.சரஸ்வத்

இந்தியாவில் குழல் வடிவில் இருக்கும் ஹைப்பா்லூப் அதிவேக ரயில்கள் கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.சாரஸ்வத் தெரிவித்துள்ளாா்.

Updated On :

இந்தியாவில் குழல் வடிவில் இருக்கும் ஹைப்பா்லூப் அதிவேக ரயில்கள் கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.சாரஸ்வத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

ஹைப்பா்லூப் தொழில்நுட்பம் போதிய அளவு வளா்ச்சி அடையவில்லை. எனவே அந்தத் தொழில்நுட்பத்துக்கு இந்தியா போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்புக்குள் கூடிய விரைவில் ஹைப்பா்லூப் ரயில்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை.

இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி மிகக் குறைவாக உள்ளது. இதனால் சீனாவில் இருந்தும், பிற வழிகளிலும் இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகளை இந்தியா சாா்ந்திருக்க வேண்டியுள்ளது. சீன பேட்டரிகளின் விலை குறைவாக உள்ளதால், பெரும்பாலும் அந்நாட்டில் இருந்து பேட்டரிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் பேட்டரி உற்பத்தி வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு சாா்பில் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் பணிகளை 2 வணிக குழுமங்கள் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சிலி, ஆா்ஜென்டீனா உள்ளிட்ட நாடுகளில் லித்தியமை தோண்டி எடுக்க, அங்குள்ள லித்தியம் சுரங்கங்ளை இந்தியா கையகப்படுத்த வேண்டும் என்ற யோசனை இருந்தது. ஆனால் அந்நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும் இந்திய தனியாா் நிறுவனங்கள் ஏற்கெனவே வணிக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளன. அந்த நாடுகளில் இருந்து லித்தியமை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே மேற்கொண்டுள்ளன என்று தெரிவித்தாா்.

உலகில் இரண்டாவது பெரிய லித்தியம் உற்பத்தியாளராக சிலி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.