மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் இன்று காலை அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து கவிந்ததில் 5 பேர் பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர்.
மும்பையிலிருந்து பீட் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது ஆஷ்தா ஃபதா என்ற இடத்தில் அதிகாலை 5.45 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
பேருந்து வேகமாகச் சென்றதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பலியான 5 பேரில் 4 பேர் பீட் மாவட்டத்தில் வசிப்பவர்கள், ஒருவர் யவத்மாலை சேர்ந்தவர் என்று அஷ்தி காவல் நிலைய பொறுப்பாளர் சந்தோஷ் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









