200 தொகுதிகளில்கூட பாஜக வெல்லாது: மம்தா பானர்ஜி

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

200 தொகுதிகளில்கூட பாஜக வெல்லாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் அவர் பேசியதாவது, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 200 இடங்களைக் கூட வெல்லாது. வடக்கு வங்கத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? பிரதமர் மோடியின் 'உத்தரவாதங்களுக்கு' இரையாகிவிடாதீர்கள்.

இவை தேர்தல் ஜூம்லா (பொய்) தவிர வேறில்லை. அம்பேத்கர் உருவாக்கிய நாட்டின் அரசியலமைப்பை நீங்கள் (பாஜக) அழித்துவிட்டீர்கள். இவ்வாறு அவர் கூறினார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு பிரச்னை காரணமாக, திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி அறிவித்தாா்.

42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 22 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 18, காங்கிரஸ் 2 இடங்களைக் கைப்பற்றின. வரும் மக்களவைத் தேர்தல் மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

முதல்கட்டமாக ஏப். 19-ஆம் தேதி ஜல்பைகுரி (தனி), கூச்பிகார் (தனி), அலிபுர்துவார் (பழங்குடியினர் தொகுதி) ஆகிய மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 37 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com