சுப்ரியா சுலேவின் வாட்ஸ்ஆப் கணக்கு ஹேக்கிங்! என்ன நடந்தது?

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலேவின் வாட்ஸ்ஆப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பின்னர் சில மணி நேரங்களில் சரியானது.
சுப்ரியா சுலே
சுப்ரியா சுலேdotcom
Published on
Updated on
1 min read

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலேவின் வாட்ஸ்ஆப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பின்னர் சில மணி நேரங்களில் சரியானது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளும் அக்கட்சியின் எம்.பி.யுமான சுப்ரியா சுலே தனது போன் மற்றும் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டதாகவும் போனில் தன்னை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் நேற்று(ஆக. 11) காலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

ஞாயிறுக்கிழமை காலை சுப்ரியா சுலே, புணேவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அப்போது தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப்பில் அவருக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அதற்கு பதில் செய்தி அனுப்பியுள்ளார். அதன்பின்னரே அவரது வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஹேக் செய்த நபர் 400 டாலர் அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளார்.

சுப்ரியா சுலே
மூளையில் சிப்: பார்வையற்றவர்களுக்கு பார்வைத் திறன்! விரைவில்...

சுப்ரியா சுலேவின்உதவியாளர் குழுவில் உள்ள ஒருவர், அவரது வாட்ஸ்ஆப் கணக்கை வைத்திருந்தபோது இவ்வாறு நடந்துள்ளது. உடனடியாக சுப்ரியா சுலேவிடம் இதுகுறித்து உதவியாளர் தெரிவிக்க, அவர் அருகில் உள்ள கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பட்டீலை ஒரு செய்தி அனுப்ப சொல்லியிருக்கிறார். அப்போது அவருக்கு பதில் வந்துள்ளது. ஆனால், சுப்ரியா சுலேவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதன்பின்னரே வேறு ஒருவர் தனது வாட்ஸ்ஆப் கணக்கை ஹேக் செய்துள்ளது தெரிந்தது என்று கூறியுள்ளார். மேலும் தனது தொடர்பில் உள்ள 20 பேருக்கு ஹேக்கர் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

பின்னர் புணே காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்து, வாட்ஸ்ஆப் நிறுவனத்தையும் தொடர்புகொண்டு இந்த பிரச்னையை சரிசெய்துள்ளார்.

மேலும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றார்.

சில மணி நேரங்களில் தனது போன் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கும் புணே காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து அன்று மாலையே எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இதுகுறித்த அவரது பதிவில், 'மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தும் எனது வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டது. நாம் அனைவரும் டிஜிட்டல் பாதுகாப்பில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் போது சரிபார்ப்பை(two factor verification) மேற்கொள்ளுங்கள். உங்கள் பாஸ்வேர்டு, ஓடிபியை யாருக்கும் கொடுக்க வேண்டாம். மேலும், தெரியாத எண்களின் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். டிஜிட்டல் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதில் நாம் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். கவனமாக இருங்கள்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com