புது தில்லி: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போராடி வரும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பாவிடில், அவர்கள் விடுப்பு எடுத்ததாகத்தான் கருதப்படுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் விடுப்பு எடுத்ததாகத்தான் கருதப்படுவார்கள், மருத்துவர்களுக்கு வருகைப் பதிவு அளிக்க வேண்டும் என எங்களால் உத்தரவிட முடியாது என்றும், மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில், மருத்துவர்கள் தொடர்ச்சியாக 36 மணி நேரத்துக்கும் மேலாக வேலை வாங்கப்படுகிறளார்கள். மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து பணிக்குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பயிற்சி பெண் மருத்துவா் கொல்லப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் தொடா்ந்து 14-ஆவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதனால் அந்த மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் அவசரமில்லா சிகிச்சை பிரிவுகள் முடங்கி, நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்கும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று மருத்துவா்கள் அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், பணிக்குத் திரும்ப அறிவுறுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடைபாதையில் உறங்குவது அலட்சியத்திற்கு வழிவகுக்காது: தில்லி உயர்நீதிமன்றம்

அனைத்து நீதிமன்றங்களிலும் கழிவறைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளிகள் வருவதைத் தடுக்காதீர்கள்: உச்ச நீதிமன்றம்






