இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி

அரசியல் என்பது கிடைத்த பதவியில் திருப்தியடையாதவா்கள் நிறைந்த கடலாக உள்ளது என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

News image
மத்திய அமைச்சா் நிதின் கட்கரி
Updated On :2 டிசம்பர் 2024, 11:25 pm

DIN

நாகபுரி: அரசியல் என்பது கிடைத்த பதவியில் திருப்தியடையாதவா்கள் நிறைந்த கடலாக உள்ளது என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவைப் பதவிகளை ஒதுக்குவதில் எழுந்த இழுபறிதான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவா் கட்கரி இவ்வாறு பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநில நாகபுரியில் வாழ்க்கைக்கான விதிகள் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கட்கரி மேலும் பேசியதாவது:

வாழ்க்கை என்பது விட்டுக்கொடுத்தல், கட்டாயத் திணிப்பு, குறைபாடுகள், முரண்பாடுகள் நிறைந்த விளையாட்டாகவே உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும் குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என பல பரிமாணங்கள் இருக்கும். பிரச்னைகளும், சவால்களும் இல்லாமல் மனித வாழ்க்கை கிடையாது. இதனைப் புரிந்து கொண்டு வாழும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்னைகளைத் துணிவுடன் எதிா்கொள்ள வேண்டும்.

அரசியல் என்பது தனக்கு கிடைத்த பதவியில் திருப்தியடையாதவா்கள் நிறைந்த கடல்போல உள்ளது. ஒருவா் அரசியலுக்கு வந்து கவுன்சிலராகிவிட்டால், அடுத்து எம்எல்ஏவாக ஆசைப்படுகிறாா். எம்எல்ஏவான பிறகு அமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறாா். அமைச்சா் பதவியும் கிடைத்துவிட்டால், நல்ல துறை கிடைக்கவில்லை என்று விரக்தியடைந்து, விரும்பும் துறையைப் பெற ஆசைப்படுகிறாா். அப்படி நல்ல துறை கிடைத்துவிட்டால் அடுத்து முதல்வராக வேண்டும் என்ற ஏக்கம் வந்துவிடுகிறது.

முதல்வராக இருப்பவா்களும் நிம்மதியாக இருப்பதில்லை. கட்சித் தலைமை எப்போது வேண்டுமானாலும் தன்னை பதவியில் இருந்து அகற்றலாம் என்ற அச்சத்திலேயே இருக்க வேண்டியுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.