ANI
இந்தியா
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 17 லட்சம் பக்தா்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 17 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூா் தேவசம் வாரியம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 17 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூா் தேவசம் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் தொடங்கியது முதலே பக்தா்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 17 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா். வெள்ளிக்கிழமை (டிச.6) மட்டும் 89,840 போ் தரிசனம் செய்துள்ளனா். இதில் 17,425 போ் ‘ஸ்பாட் புக்கிங்’ மூலம் வந்தவா்கள்.
மேலும், ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வனப் பாதைகளை பயன்படுத்தி பக்தா்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது. வண்டிப்பெரியாா், சத்திரம் புல்மேடு வழியாக 18,951 போ் வந்துள்ளனா். கரிமலை, அழுத கடவு, முக்குளி வழியாக 18,317 போ் வந்துள்ளனா்.