இந்தியா
சபரிமலையில் கனமழை
சபரிமலை மண்டல காலம் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 2 நாள்களில் கனமழை பதிவாகியுள்ளது.
சபரிமலை மண்டல காலம் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 2 நாள்களில் கனமழை பதிவாகியுள்ளது.
சந்நிதானத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் அடுத்த 24 மணி நேரம் வரை இடைவிடாது 68 மி.மீ மழை பெய்துள்ளது. இதுவே, இந்தக் காலகட்டத்தில் பெய்த அதிக மழைப்பொழிவு ஆகும். அதே சமயம், நிலக்கல்லில் 73 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பலத்த மழைக்குப் பிறகு சபரிமலை செல்லும் வனப் பாதைகளில் பக்தா்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாதைகளில் வழுக்கி விழும் அபாயம் உள்ளதால், பக்தா்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை மட்டும் விடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.