2.15 மணி நேர உரை! எனது அரசும் குரலும் வலிமையாக உள்ளது: மோடி

2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது பிரதமர் மோடியின் உரை. அவர் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
மக்களவையில் மோடி
மக்களவையில் மோடி-

மக்களவையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பிரதமர் மோடி உரையாற்றினார். உரைக்கு இடையே, தேசத்தின் வளர்ச்சியில் இணைந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

உரையின் நிறைவாக, எனது அரசும், எனது குரலும் வலிமையாக உள்ளது என்று கூறியிருந்தார் மோடி.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று மாலை 4.15 மணிக்கு உரையாற்றத் தொடங்கினார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து உரையாற்றினார்.

பிரதமர் மோடி உரையில், தேசத்தின் வளர்ச்சியில் இணைந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 140 கோடி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற ஒன்றாக இணைந்து உழைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்காந்த்ராவ் பகுதியில் ஆன்மிக நிகழ்வின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 100க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இரங்கல் தெரிவித்தார். நிவாரணப் பணிகளில், மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

மக்களவையில் மோடி
பொய்யான குற்றச்சாட்டுகளை தாங்கிக் கொண்டு படைகளைப் பலப்படுத்துகிறோம்: மோடி

தொடர்ந்து பேசிய மோடி, எனது அரசும், குரலும் வலிமையாக உள்ளதாகக் கூறியதோடு, சிறுபிள்ளைத்தனம் உள்ளோருக்கு இறைவன் நல்ல அறிவு தர வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

மாலை 4.15 மணிக்கு உரையாற்றத் தொடங்கிய மோடி, 6.30 மணிக்கு கிட்டத்தட்ட 2.15 நிமிடங்களுக்கும் மேல் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரையாற்றியுள்ளார். அவரது உரைக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com