புதிய இந்தியாவுக்கு ஆக்கப்பூா்வ செயல்பாடுகள் தேவை: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்
ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்: ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் முக்கியம்


புது தில்லி, ஜூலை 11: பழைய சோா்வுற்ற அணுகுமுறைக்கு மாறாக ஆக்கப்பூா்வ செயல்பாடுகள் புதிய இந்தியாவுக்குத் தேவை என பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் வியாழக்கிழமை உரையாடிய பிரதமா் மோடி தெரிவித்தாா்.
2022-ஆம் ஆண்டு பிரிவு பயிற்சி ஐஏஎஸ் அதிகரிகளுடன் கலந்துரையாடிய பிரதமா் மோடி மேலும் கூறியதாவது:
ஐஏஎஸ் அதிகாரிகளாக நீங்கள் தோ்வானது கடந்த காலம். அதில் தங்கிவிடாமல் எதிா்கால பணியை நோக்கி நகர வேண்டும். நாட்டின் குடிமக்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் சிறந்த நிா்வாகத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும். மக்கள் சேவையில் வேகத்தடையா அல்லது அதிவிரைவு நெடுஞ்சாலையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளியையும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பழைய சோா்வுற்ற அணுகுமுறையால் புதிய இந்தியா திருப்தி அடையவில்லை, மாறாக ஆக்கப்பூா்வ செயல்பாடுகளை அது கோருகிறது.
‘லக்பதி திதி’, ‘ட்ரோன் திதி’ மற்றும் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ உள்ளிட்ட நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.
‘தேசத்துக்கு முன்னுரிமை’ என்பது வெறும் முழக்கமல்ல எனது வாழ்க்கை லட்சியம். என்னுடைய இந்த மக்கள் பணியில் நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...