இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நீட் விவகாரத்தில் ராகுல் மன்னிப்பு கேட்பாரா? பாஜக

நீட் தேர்வு முறையை மோசடி என்று மக்களவையில் ராகுல் காந்தி பேசியிருந்தார்.

News image
மக்களவையில் ராகுல் காந்தி- ANI
Updated On :24 ஜூலை 2024, 6:45 am

DIN

நீட் தேர்வு முறையை மோசடி எனக் குறிப்பிட்டதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் கல்வி அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், ‘வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவலாக நடைபெற்றுள்ளதற்கும், ஒட்டுமொத்தமாக தோல்வி என்பதற்கும் ஆதாரமில்லை’ எனத் தெரிவித்து மறுதேர்வு கோரிய மனுக்களை செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மக்களவையில் நீட் தேர்வு முறையை மோசடி என்று தெரிவித்த ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று மன்னிப்பு கோருவாரா என்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரவிசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய ரவிசங்கர், ”நீட் தேர்வில் மோசடி செய்துள்ளதாகு ராகுல் காந்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். நம் நாட்டின் தேர்வு முறையை அவர் களங்கப்படுத்த விரும்புகிறாரா? காங்கிரஸ் ஆட்சியில் பலமுறை வினாத்தாள் கசிந்தன. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? ராகுல் காந்தி தனது சொந்த நாட்டை ஏன் அவமதிக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை மக்களவையில் ராகுல் காந்தி பேசியவதாவது:

“பணமிருந்தால், தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி.

நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒருவரிடம் பணமிருந்தால், தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்கி விடலாம் என்றுதான், மக்களின் எண்ணத்தையே எதிர்க்கட்சிகளும் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.