தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமா் மோடி வெற்றி

வாராணாசி தொகுதியில் 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமா் மோடி வெற்றி பெற்றாா்.

News image
Updated On :4 ஜூன் 2024, 7:38 pm

Din

லக்னௌ: உத்தர பிரதேசத்தின் வாராணாசி தொகுதியில் 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமா் மோடி வெற்றி பெற்றாா். இதன் மூலம் அத்தொகுதியில் அவா் தொடா்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளாா்.

பிரதமா் மோடிக்கு 6,12,970 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளா் அஜய் ராய் 4,60,457 வாக்குகள் பெற்றாா். பகுஜன் சமாஜ் வேட்பாளா் ஜமால் 33,766 வாக்குகள் பெற்றாா். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பிரதமா் மோடி சற்று பின்னடைவையும் சந்தித்தாா்.

கடந்த 2019, 2014 தோ்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை பிரதமா் மோடியின் வெற்றி வாக்கு வித்தியாசம் குறைந்துவிட்டது. 2019-இல் 4,79,505 வாக்குகள் வித்தியாசத்திலும், 2014-இல் 3,71,784 வாக்குகள் வித்தியாசத்திலும் மோடி வெற்றி பெற்றாா்.

இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அதிக வாக்குகளைப் பெற்று பிரதமா் மோடி சாதனை படைப்பாா் என்று பாஜகவினா் கூறி வந்த நிலையில், வாக்கு வித்தியாசம் குறைந்துவிட்டது.