மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரூ.2 கோடி வைரங்களை துபைக்கு கடத்த முயன்றவர் கைது!

ரூ.2 கோடி வைரங்களுடன் துபை செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :16 ஜூன் 2024, 8:05 am

DIN

சூரத் விமான நிலையத்தில் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வைரங்களை மறைத்து வைத்திருந்ததாக துபை செல்லும் இந்தியப் பயணி ஒருவர், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சஞ்சய்பாய் மொராடியா என்ற அந்தப் பயணி இண்டிகோ ஏர்லைன்ஸ் சர்வதேச விமானத்தில் துபை செல்வதற்கு முன், சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அந்தப் பயணி முதலில் சாதாரண சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து முழு உடலையும் சோதனை செய்ததில், அவரது சூ சாக்ஸ் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்த 1,092 கிராம் மெருகூட்டப்படாத வைரங்களை அதிகாரிகள் மீட்டனர்.

மேலும், விசாரணைக்காக பயணி சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட வைரங்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2.19 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.