இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு

நாட்டின் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவித்துள்ளது மத்திய அரசு.

News image
Updated On :1 மார்ச் 2024, 11:22 am IST

புதுதில்லி: சமூக மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவித்துள்ளது மத்திய அரசு.

பல்வேறு சமூக நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதில் மாநிலங்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு 3 ஆவது தவணையாக ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவித்துள்ளது. தொடர்ந்து பிகாருக்கு ரூ.14,295 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.11.157 கோடியும், மகாராஷ்டிரத்துக்கு ரூ.11,157, மேற்கு வங்கத்துக்கு ரூ.8,978 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி, ஆந்திரத்துக்கு ரூ.5,752 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.9564 கோடி, மணிப்பூருக்கு ரூ.1,018 கோடி, அருணாசலத்துக்கு ரூ.2,497 கோடி, அஸ்ஸாம் ரூ.4,446 கோடி, கோவா ரூ.549 கோடி, குஜராத் ரூ.4,943 கோடி, ஜார்காண்ட் ரூ.4,700 கோடி, கர்நாடகம் ரூ.5,183 கோடி, கேரளத்துக்கு ரூ.2,736 கோடி, மிசோரம் 7,11 கோடி, சிக்கிம் ரூ.551 கோடி என ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வாக மத்தியில் ஆளும் பாஜக அரசு விடுவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.