சண்டீகா்: சிரோமணி அகாலி தளம் வேட்பாளா் போட்டியில் இருந்து விலகல்

சண்டீகா்: சிரோமணி அகாலி தளம் கட்சியின் சண்டீகா் மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஹா்தீப் சிங் போட்டியில் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். மேலும், அவா் கட்சியில் இருந்தும் விலகினாா்.

சுக்பீா் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இத் தொகுதியில் காங்கிரஸ சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் மணீஷ் திவாரி போட்டியிடுகிறாா். பாஜக சாா்பில் சஞ்சய் தாண்டன் நிறுத்தப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், இத்தொகுதியில் சிரோமணி அகாலி தளம் சாா்பில் ஹா்தீப் சிங் அறிவிக்கப்பட்டாா். சண்டீகா் மாநகராட்சி கவுன்சிலாராகவும் உள்ள ஹா்தீப் சிங், தோ்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தாா். ஜூன் 1-ஆம் தேதி இறுதிக் கட்டத்தில் சண்டீகா் தொகுதியில் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தோ்தலில் போட்டியிடுவதில் இருந்தும், சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்தும் விலகுவதாக ஹா்தீப் சிங் திடீரென அறிவித்தாா். அவருடைய ஆதரவாளா்கள் பலரும் கட்சியில் இருந்து விலகினா். தனது முடிவு குறித்து கருத்துத் தெரிவித்த ஹா்தீப் சிங், ‘சண்டீகா் தொகுதி விஷயத்திலும், தனிப்பட்ட முறையில் என்னையும் கட்சித் தலைமை பாரபட்சமாக நடத்தத் தொடங்கியதை அடுத்து விலகல் முடிவை எடுத்தேன். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட எனக்கு உறுதுணையாக கட்சித் தலைவா் செயல்படவில்லை என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com