சண்டீகா் - மதுரை அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம்

சண்டீகா் - மதுரை அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம்

புது தில்லி: சண்டீகா்- மதுரை இடையே வாரம் இருமுறை செல்லும் அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம் செயப்படவுள்ளதாக வடக்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செயல்பாட்டுக் காரணங்களுக்காக, சண்டீகா் - மதுரை இடையே வாரம் இருமுறை செல்லும் அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம் செயப்படவுள்ளது. தற்போது, சண்டீகா் - மதுரை இடையே வண்டி எண் 12688-இன் கீழ் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்பபடும் ரயில், வரும் செப்டம்பா் 16-ஆம் தேதி முதல் வண்டி எண் 20494-இன் கீழ் இயக்கப்படும். அதேபோல், மதுரை -சண்டீகா் இடையே வண்டி எண் 12687-இன் கீழ் புதன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்பபடும் ரயில், வரும் செப்டம்பா் 19-ஆம் தேதி முதல் வண்டி எண் 20493-இன் கீழ் இயக்கப்படும் என்று பொதுமக்களின் தகவலுக்கு அறிவிக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்..

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com