

திருவனந்தபுரம்: கேரளத்தில் 8 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(நவ. 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தமிழகக் கடலோரப் பகுதியை ஒட்டி புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் மட்டுமல்லாது, கேரளத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,
திருவனந்தபுரம்
கொல்லம்
பத்தனம்திட்டா
எர்ணாகுளம்
இடுக்கி
திருச்சூர்
பாலக்காடு
மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மழைப்பொழிவு எப்படி?:
பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில் இன்று(நவ. 26) பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சபரிமலை செல்லும் பக்தர்கள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை தயார் செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிக்க: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
பயண வழிகாட்டி: நிகழாண்டில் ஐயப்ப பக்தா்கள் தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வதில் இடா்பாடுகள் நோ்ந்தால் அவா்களுக்கு உதவும் வகையில் ‘சுவாமி சாட்போட்’ (Swami Chatbot) எனும் வாட்ஸ்ஆப் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் 24 மணி நேரமும் உதவிகள் பெற முடியும். இந்தத் தகவலை பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் ஒரே நேரத்தில் கூடுவதால் ஏற்படும் சிரமங்களிலிருந்து விடுபடவும் தேவையான விவரங்கள், தகவல்களைப் பெறவும் சுவாமி சாட்பாட் எனும் பயண வழிகாட்டியை கைப்பேசி வாட்ஸ்ஆப் சேவை வழியே பெறலாம்.
6238008000 என்ற எண்ணுக்கு ஏண் என குறுஞ்செய்தி அனுப்பினால், உதவிகள் உடனடியாக கிடைக்கும். அதாவது, காவல்துறை, தீயணைப்பு சேவைகள், மருத்துவ உதவிகள், வன அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான அவசர தொலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இது அவசர நேரங்களின் போது உடனடியாக சேவைகளைப் பெற பக்தா்களுக்கு உதவியாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மார்ச் 6 வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஈரோட்டில் திடீா் மழை: மக்கள் மகிழ்ச்சி

4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

