
தனது எதிர்கால அரசியல் பொறுப்புகளைக் கட்சியும் அதன் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தீர்மானிப்பார் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் சத்யேந்தா் ஜெயின். கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு நபர்களின் பெயரில் அசையும் சொத்துக்கள் வாங்கியதாக இவா் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
பின்னா், அதே விவகாரத்தில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அவரைக் கடந்த 2022-ஆம் ஆண்டு கைது செய்தது.கடந்த ஆண்டு மே மாதம் மருத்து காரணங்களுக்காக சத்யேந்தா் ஜெயினுக்கு உச்சநீதிமன்றம் சிறிது காலம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. இதையடுத்து, அவா் மீண்டும் திகாா் சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி 18 மாதங்களாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், எனது அரசியல் பங்களிப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் என்ன சொன்னாலும் அதைச் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அட்டூழியம் நடைபெறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி திரும்பியது போல் தெரிகிறது. பொதுமக்களுக்கு செய்யும் பணிகளில் அரசு போட்டிப்போட வேண்டும். ஆனால், பாஜக அதைச் செய்வதில்லை. உங்களை வேலை செய்ய விடமாட்டோம் என்கிறார்கள்.
ஷகுர்பஸ்தி தொகுதியின் எம்எல்ஏவான ஜெயின், மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் யமுனாவைச் சுத்தம் செய்யும் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மியின் பணிகளை முடக்குவதற்காகத் தான் கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். நாட்டிற்கு இது மிகவும் துரதிருஷ்டவசமானது. அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், அப்போதுதான் நாடு முன்னேறும்.
சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயின் வெள்ளிக்கிழமை இரவு கேஜரிவாலை ஃபிரோஸ்ஷா சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். திகார் சிறைக்கு வெளியே ஜெயினை வரவேற்க தில்லி முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.