/

ஹரியாணா: ஆம் ஆத்மியின் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி 7-வது மற்றும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

News image
ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்.
Updated On :12 செப்டம்பர் 2024, 6:20 am

DIN

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி 7-வது மற்றும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று(செப். 12) வெளியிட்டுள்ளது.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு அக்டோபா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில், ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் ஹரியாணா பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன.

ஆம் ஆத்மி இதுவரை 6 கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், இறுதியாக 3 தொகுதிகளுக்கு தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஜகத்ரி, நார்நவுண்ட், நூ ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலமாக 90 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே(செப். 12) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.