
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மொபைல் வங்கி, ஏடிஎம் மூலம் பணமெடுத்தல், கூகுள் பே போன்ற செயலிகளில் பணம் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இன்று காலை 8.15 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரை சிக்கல் இருந்ததாகவும், காலை முதல் சுமார் ஆயிரம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கிச் சேவை பாதிக்கப்படுவது தொடர்பான தகவல்களை அறிய உதவும் இணையதளத்தில், எஸ்பிஐ வங்கியின் மொபைல் சேவை 64 சதவீதம் பாதிக்கப்பட்டதாகவும், 33 சதவீத பணப்பரிமாற்றங்கள் பாதிக்கப்பட்டதாகவும், எஸ்பிஐ ஏடிஎம்களில் 3 சதவீதம் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சேவையில் பாதிப்பு ஏற்பட்டதை எஸ்பிஐ வங்கியும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நிதியாண்டு முடிந்ததையடுத்து, டிஜிட்டல் சேவையில் ஏப்ரல் 1ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வேரை சேவைகள் பாதிக்கப்படும் என்றும், யுபிஐ லைட் சேவை அல்லது ஏடிஎம் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், இதனால் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
நிதியாண்டு முடிவடையும் நிலையில், எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளின் டிஜிட்டல் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது.
சில வங்கிகளில் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் யுபிஐ சேவைகள் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.