
எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராணுவம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பூஞ்ச் பகுதியில் சண்டை நிறுத்தம் மீறப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருவதை அறிய முடிகிறது.
இத்தருணத்தில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! ஆகவே, சரிபார்க்கப்படாமல் வரும் தகவல்களை தயவுசெய்து பகிர வேண்டாம் என்று ராணுவத்தால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.