

புது தில்லி: ரஷியா, எப்போதுமே, இந்தியாவின் எரிபொருள் வழங்குநராக விளங்கும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
மேலும், வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, நிலையான, தடையற்ற எரிபொருள் வழங்குநராக ரஷியா எப்போதும் நீடிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை மாலை தில்லி வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் இல்ல அரங்கில் வெள்ளிக்கிழமை காலை பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, பின்னா், இரு தலைவா்கள், இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23-ஆவது ஆண்டு மாநாடு நடைபெற்றது.
பிறகு, செய்தியாளர்களை, இரு தலைவர்களும் கூட்டாக சந்தித்துப் பேசினர். புதின் பேசுகையில், இரு நாடுகளும், எரிபொருள் தேவையில் மிகவும் வெற்றிகரமாக கூட்டாளிகளாக உள்ளோம். வளர்ந்து வரும் இந்தியாவின் எரிபொருள் தேவையில் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி என அனைத்தையும் ரஷியா தடையின்றி வழங்கி வருகிறது. வளர்ந்து வரும் இந்தியாவுக்கு தடையின்றி எரிபொருள்களை வழங்கவும் முனைப்போடு இருக்கிறோம் என்றார்.
இரு நாடுகளின் ஒத்துழைப்பில், ஏற்கனவே, ஆணு சக்தி ஆலைப் பணிகள் செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அணு சக்தி ஆலையைக் கட்டமைக்கும் பணியில் ரஷியா தொடங்கியிருக்கிறது.
இரு நாடுகளும் இணைந்து சிறிய மாடுலர் உலைகள் மற்றும் மிதக்கும் அணு மின் நிலையங்களின் கட்டுமானம் மற்றும், அணு தொழில்நுட்பங்களின் ஆற்றல் அல்லாத பயன்பாடுகள், உதாரணமாக மருத்துவம், விவசாயத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க.. மாணவர்கள் கவனத்துக்கு.. சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.