தில்லி கார் குண்டு வெடிப்பு: 8 வது நபரை கைது செய்தது என்.ஐ.ஏ.!

தில்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு வழக்கில் 8 வது நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தில்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு வழக்கில் 8 வது நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (டிச., 9) கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக, ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் பிலால் நஸீர் மல்லா என்பவரை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

கார் வெடித்த விவகாரத்தில் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்த மருத்துவர் உமர் உன் நபிக்கு, ஆயுதங்களைக் கொண்டுசெல்வதற்கு பிலால் நஸீர் ஆதரவாக இருந்தது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே நவ., 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தாக்குதலைப்போன்று இருப்பதால், இதனை பயங்கரவாத தாக்குதலாக மத்திய அரசு அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கார் வெடித்தபோது அங்கிருந்த கடை ஊழியர்கள், பயணிகள், சிசிடிவி காட்சிகள் கொண்டு அதிகாரிகளின் கடும் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் விளைவாக உமர் நபியின் நெருங்கிய உதவியாளர்களாக இருந்த ஜசீர் பிலால், அமீர் ரஷித் அலி உள்ளிட்ட 7 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது, கார் வெடிப்பு சம்பவத்தின் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் பிலால் நஸீர் மல்லா என்பவரை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்டுள்ள பிலால் நஸீர் மல்லாவிடம் மேற்கொண்ட விசாரணையில், உமர் உன் நபிக்கு ஆயுத தளவாட போக்குவரத்துக்கு இவர் உதவியது தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

Summary

Delhi car blast NIA makes eighth arrest in terror case; accused held for destroying

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com