பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லி தேர்தல்: கேஜரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2025, 7:34 am

DIN

தில்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 19.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தில்லி வடகிழக்கு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8 என்று எண்ணப்பட உள்ளன.

Story image

தில்லி பேரவைத் தேர்தலில் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

தில்லியில் உள்ள லேடி இர்வின் பள்ளியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் புதுதில்லி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளருமான அரவிந்த் கேஜரிவால், மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் பெற்றோர்களுடன் வந்து வாக்களித்தார்.

தில்லியின் வளர்ச்சிக்காக தில்லி மக்கள் அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கேஜரிவால் தெரிவித்தார்.

தில்லி முதல்வர் அதிஷியும் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், 'இது உண்மைக்கும் பொய்களுக்குமான தர்மயுத்தம். உண்மை வெல்லும்' என்று கூறினார்.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தில்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, ஆம் ஆத்மி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயின், பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் வாக்களித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.