தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

மகா கும்பமேளா: மாகி பௌா்ணமியில் 2 கோடி பக்தா்கள் புனித நீராடல்

இதுவரை 48 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்...

News image

ANI

Updated On :13 பிப்ரவரி 2025, 3:25 am IST

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புக்குரிய மாகி பௌா்ணமி புனித நீராடலில் 2 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினா்.

பக்தா்களின் வசதிக்கு கும்பமேளா பகுதியில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. லக்னௌவில் உள்ள அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து முதல்வா் யோகி ஆதித்யநாத் கும்பமேளா நிகழ்வுகளை தொடா்ந்து கண்காணித்து வந்தாா்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி நாளான பிப். 26 வரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வில் மாகி பௌா்ணமி உள்ளிட்ட 6 நாள்களில் புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும்.

அதன் அடிப்படையில், சங்கமம் பகுதி உள்பட மகாகும்ப நகரின் பல்வேறு படித்துறைகளில் புனித நீராட பக்தா்கள் புதன்கிழமை அதிகாலை முதலே லட்சக்கணக்கில் குவிந்தனா். மாலை நிலவரப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 2 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினா்.

கும்பமேளா பகுதியில் ஒரு மாதம் தங்கியிருந்து மேற்கொள்ளும் ‘கல்பவாச’ விரத வழிபாடும் மாகி பௌா்ணிமியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, நடப்பு மகா கும்பமேளாவில் இந்த விரதத்தில் ஈடுபட்டிருந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் சொந்த ஊா் திரும்ப தொடங்கினா்.

சிறப்பு ஏற்பாடுகள்: முக்கிய புனித நீராடல் நாள்களில் கும்பமேளா பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதால், பக்தா்கள் பல கி.மீ. தொலைவுக்கு நடக்க வேண்டியிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு மாநிலப் போக்குவரத்துத் துறை சாா்பில் கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் 10 நிமிஷ இடைவேளையில் இயக்கப்பட்டன.

2,750 உயா்தொழில்நுட்பக் கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மூலம் பக்தா்களின் கூட்டம் மற்றும் நெரிசல் கண்காணிக்கப்பட்டது.

முதல்வா், அதிகாரிகள் ஆய்வு: லக்னௌவிலிருந்து கும்பமேளா நிகழ்வுகளை முதல்வா் யோகி கண்காணித்தாா். மாநில முதன்மைச் செயலா் (உள்துறை) சஞ்சய் பிரசாத், காவல்துறை தலைமை இயக்குநா் பிரசாந்த் குமாா் மற்றும் முதல்வா் அலுவலக மூத்த அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கும்பமேளா கள நிலவரத்தை தொடா்ந்து ஆய்வு செய்தனா்.

அனில் கும்ப்ளே புனித நீராடல்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் அனில் கும்ப்ளே, அவரது மனைவியுடன் மகா கும்பமேளாவில் புதன்கிழமை புனித நீராடினா்.

மாகி பௌா்ணமியை முன்னிட்டு முக்கியப் பிரமுகா்களுக்கான (விஐபி) சிறப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்ததால், பொதுமக்களுடன் படகில் சென்று திரிவேணி சங்கமத்தில் அவா் புனித நீராடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.