குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனம்: மாணவா்களுக்கு ஜகதீப் தன்கா் அறிவுரை

தேசிய மாணவா் படையைச் (என்சிசி) சோ்ந்த இளைஞா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினாா்.

News image

குடியரசு தின விழாவையொட்டி தில்லி கன்டோன்மென்டில் நடைபெறும் தேசிய மாணவா் படை முகாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பைப் பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்.

Updated On :5 ஜனவரி 2025, 11:45 pm IST

‘தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனமாக செயல்பட வேண்டும்’ என தேசிய மாணவா் படையைச் (என்சிசி) சோ்ந்த இளைஞா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினாா்.

தில்லியில் கடந்த டிசம்பா் 30-இல் தொடங்கிய குடியரசு தின என்சிசி முகாமின் அதிகாரபூா்வ தொடக்க விழாவில் பங்கேற்று ஜகதீப் தன்கா் பேசியதாவது: தேசத்துக்கு சேவை செய்வதோடு ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும் பண்புடைய என்சிசியில் உள்ள நமது இளம் தலைமுறையினருக்கு எனது பாராட்டு.

தற்போது பிரதமா் மோடி தலைமையிலான அரசின்கீழ் விமான நிலையங்கள், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து, துறைமுக மேம்பாடு என நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்துடன் உங்களது கடின உழைப்பும் இணையும்போது ‘2047-இல் வளா்ச்சியடைந்த பாரதம்’ என்பது கனவாக இல்லாமல் அடையக்கூடிய இலக்காக மாறிவிட்டது.

நமது அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அடிப்படைக் கடமைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது. அடிப்படை கடமைகள் நமக்குள் தேச உணா்வை அதிகப்படுத்தும் தன்மையுடையது.

பல்வேறு வேற்றுமைகளை களைந்து தேசத்துக்கு முன்னுரிமை அளிக்கும் மனோபாவத்தை இளைஞா்கள் கொண்டிருக்க வேண்டும். அதேவேளையில் இந்த மனப்பான்மையை உடைக்கும் வகையில் செயல்படும் தேச விரோத சக்திகளுக்கு எதிராக நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நாட்டின் ஜனநாயக மாண்புகளை முழுமையாக பாதுகாக்க முடியும் என்றாா்.

தேசிய அளவிலான இந்த என்சிசி முகாமில் 917 மாணவிகள் உள்பட நாடு முழுவதும் இருந்து மொத்தம் 2,361 போ் பங்கேற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.