பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மலிவால்!

தில்லி மக்கள் தண்ணீர் பிரச்னையில் திணறுகிறார்கள் மாலிவால் குற்றச்சாட்டு..

News image

மாலிவால்

Updated On :20 ஜனவரி 2025, 5:45 pm IST

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக மாநிலங்களவை எம்.பி., ஸ்வாதி மலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி,

பத்தாண்டுக் கால ஆம் ஆத்மியின் ஆட்சியில் தில்லியைப் பாதிக்கும் பல பிரச்னைகளை அவர் கோடிட்டுக் காட்டினார். தில்லி முழுவதிலும் இருந்து எனக்குப் புகார்கள் வருகின்றன, கடந்த 20 ஆண்டுகளில் இருந்ததை விட இன்று நகரின் நிலை மோசமாக உள்ளது.

சாலைகளில் எங்குப் பார்த்தாலும் குப்பைக் குவியல்கள், குழாய்களில் வரும் நீர் குடிக்கமுடியாத நிலையில் உள்ளது. துவாரகாவில் பல மாதங்களாகக் குழாயிலிருந்து கருப்பு நீர் வருகிறது. பால்ஸ்வாவில் மஞ்சள், நுரை நிரம்பிய தண்ணீர் ஓடுகிறது.

குழாய்களில் வரும் நீர் பீர் போல இருப்பதால், மக்கள் வீடுகளுக்கு பீர் அனுப்பும் திட்டத்தை தொடங்கியுள்ளீர்களா என்று தில்லி அரசிடம் கேட்க விரும்புகிறேன். மக்கள் நாள்தோறும் 20 முதல் 100 ரூபாய் செலவழித்து குடிநீர் வாங்குகின்றனர். இந்த நிலையில் தில்லியில் தண்ணீர் எப்படி இலவசம் என்று கூறுகிறீர்கள்..!

மக்கள் நலனில் அரசு ஆடம்பரத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டிய மலிவால், தங்களின் ஷீஷ் மஹாலில் மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் விலையுயர்ந்த நீர் அமைப்புகளை நிறுவும்போது, பொதுமக்கள் கருப்பு மற்றும் மஞ்சள் நீரை உட்கொள்ள வைக்கிறனர்.

பால்ஸ்வா குப்பைக் கிடங்கு குறைவதற்குப் பதிலாக வளர்ந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் குப்பைக் கிடங்கு சுத்தம் செய்ததாகக் கூறினாலும், குவியல் அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளாக சாலைகளில் குப்பை பெருகிக் கிடக்கும் பங்கா சாலையை நான் பார்வையிட்டேன். பிரச்னையை எழுப்பிய பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு எம்பி ஏன் அடிப்படைத் தூய்மையில் தலையிட வேண்டும்?

நான் சங்கம் விஹாருக்குச் சென்றேன், அங்கு தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் இப்படி அசுத்தமாக வாழத் தள்ளப்பட்டுள்ளனர், நரக வாழ்க்கையை நடத்துகிறார்கள். நான் வந்த பிறகுதான், உள்ளூர் எம்.எல்.ஏ., சாலைகளை சீரமைப்பதாக உறுதியளித்தார். அவர் ஏன் இதுவரை செயல்படவில்லை?

மக்கள் அதிருப்தியால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த மாலிவால், தில்லி அரசு விழித்துக்கொண்டு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். சுத்தமான நீர் வழங்குதல், சாலைகளைச் சீரமைத்தல், குப்பை மற்றும் கழிவுநீர் பிரச்னைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவை அடிப்படைத் தேவைகள், அவற்றைப் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 5-ம் தேதி தில்லி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிப்ரவரி 8-ம் தேதி முடிவுகள் வெளியாகும் நிலையில், முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக, ஆம் ஆத்மி கட்சி அதன் சொந்த உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.