மகாராஷ்டிர பேரவையில் தலைமை நீதிபதி கவாய்க்கு பாராட்டு விழா!

மகாராஷ்டிர பேரவையில் தலைமை நீதிபதி கவாய்க்கு பாராட்டு விழா...
 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் PTI
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 52 -ஆவது தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பூஷன் ராமகிருஷ்ண கவாய், கடந்த மே மாதம் பதவியேற்றார்.

இந்த நிலையில், இந்திய நீதித் துறையின் மிக உயர்ந்த பதவியை அடைந்து மகாராஷ்டிரத்தை பெருமைப்படுத்தியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்க்கு பாராட்டு விழா நடத்தப்படவிருப்பதாக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் அறிவித்துள்ளார்.

வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மத்திய அரங்கில் பாராட்டு விழா நடைபெறும் என்று இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டது.

கவாய்க்கு அவமதிப்பு!

மும்பை தாதரில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, பதவியேற்ற சில நாள்களில் வருகை தந்திருந்த பி.ஆர். கவாய்யை வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அதிருப்தி தெரிவித்த கவாய், “ஜனநாயகத்தின் தூணான நீதித்துறைக்கு, மற்ற துறைகள் காட்டும் இதுபோன்ற மரியாதை கவலையளிக்கிறது. இங்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நீதித்துறை, சட்டப்பேரவை, நிர்வாகம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள். இவை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் மற்றொன்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.

Summary

Maharashtra Legislative Assembly leader announced that a felicitation ceremony will be held for Supreme Court Chief Justice B.R. Gavai at the Assembly premises.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com