
கேரள மாநிலத்தில், அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியிருப்பதால், ஜூலை 29 ஆம் தேதி வரையிலான அடுத்த 5 நாள்களுக்கு, கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று (ஜூலை 25) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 25 முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை கேரளத்தில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால், தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வடமேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள குறைந்தக் காற்றழுத்தப் பகுதியானது, அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கேரளத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது முதல், அம்மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜிபே, போன்பே, பிம் செயலிகளைப் பயன்படுத்துபவரா? ஆக.1 முதல் புதிய விதிமுறைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.