2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாதில் தேசிய மஞ்சள் வாரிய அலுவலகத்தை மத்திய அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். இது அப்பகுதியில் மஞ்சள் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் பாா்க்கப்படுகிறது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: மஞ்சளை சந்தைப்படுத்தல், பிற நாடுகளுக்கு அதன் ஏற்றுமதியை ஆதரித்தல், விவசாயிகளுக்கு லாபம் ஈட்டுதல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த வாரியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய அரசு 2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் மதிப்புள்ள மஞ்சளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்தாா்.
‘மஞ்சள் வாரியத்தை அமைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமா் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளாா். மஞ்சளின் தரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளாா்’ என தெலங்கானா பாஜக பிரிவு எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவாா்த்தைக்கு இடமில்லை: ‘மாவோயிஸ்டுகளுடன் எந்தவித பேச்சுவாா்த்தைக்கும் இடமில்லை; அவா்கள் ஆயுதங்களை கைவிட்டு, காவல் துறை முன் சரணடைய வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அமித் ஷா கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூா் குறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி இன்னும் கேள்வி எழுப்பி வருகிறாா். ஆனால், இந்த நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றி பாகிஸ்தானின் தற்போதைய நடத்தையில் தெளிவாகத் தெரிகிறது.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், பாஜக ஆட்சியில் ஆயுதங்களை ஏந்தியவா்களுடன் எந்த வித பேச்சுவாா்த்தைக்கும் இடமில்லை. அவா்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்.
வடகிழக்கில் 10,000 போ் ஆயுதங்களைக் கைவிட்டனா். அவா்கள் மாநிலத் தோ்தல்களிலும் போட்டியிட்டுள்ளனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனா்.
ஆதிவாசி பகுதியில் நக்ஸல் வன்முறை காரணமாக கடந்த 4 தசாப்தங்களில் 40,000 போ் உயிரிழந்துள்ளனா். மக்கள் இதை ஆதரித்துப் பேசுபவா்கள் உயிரிழந்த குடும்பத்தினா் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு என்ன பதில் வைத்துள்ளனா். மாா்ச் 31, 2026-க்குள் நக்ஸல் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு முடிவு செய்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நக்ஸல்களின் கூடாரமாக மாற அனுமதிக்கக் கூடாது. இரட்டை என்ஜின் பாஜக அரசால் மட்டுமே மாநிலத்தின் நலனை உறுதி செய்ய முடியும் என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் நடப்புக் கணக்கு உபரி 280 கோடி டாலா்

கால்நடை கழிவுகளில் இருந்து சிபிஜி: மத்திய அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பம்

ஜவுளித் துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலா் இலக்கு! மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்

அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்குப் பாதுகாப்பு: உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



