சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!

உத்தரப் பிரதேசத்தில் 43 ஆண்டுகள் கழித்து 104 வயது முதியவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2025, 6:50 pm IST

உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 104), இவர் கடந்த 1921 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியன்று பிறந்ததாக அவரது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று, இரண்டு தரப்புக்கு இடையில் உண்டான மோதலில் பிரபு சரோஜ் என்பவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று லங்கன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதையடுத்து, இந்த வழக்கில் கடந்த 1982-ம் ஆண்டு அவர்கள் நால்வருக்கும் பிரக்யராஜ் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து, சிறையில் அடைத்தது.

இந்நிலையில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் நால்வரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த காலத்திலேயே அவர்களில் மூன்று பேர் காலமாகியுள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கிலிருந்து கடந்த மே 2 ஆம் தேதியன்று, லங்கனை அலகாபாத் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், மே 20 ஆம் தேதியன்று லங்கன் கௌஷம்பி மாவட்ட சிறையிலிருந்து சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (மே 23) தெரிவித்துள்ளனர்.

104 வயதில் முதியவராக விடுதலைச் செய்யப்பட்டுள்ள அவர் அம்மாவட்டத்தின் ஷரைரா பகுதியில் வசிக்கும் அவரது மகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.