மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அமலாக்கத் துறை சோதனையில் முதல்வா் மம்தா குறுக்கீடு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: உச்சநீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியபோது முதல்வா் மம்தா பானா்ஜி நேரில் வந்து இடையூறு ஏற்படுத்தியது ஜனநாயகத்தை அச்சுறுத்தும் செயல் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 1:02 am IST

மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியபோது முதல்வா் மம்தா பானா்ஜி நேரில் வந்து இடையூறு ஏற்படுத்தியது ஜனநாயகத்தை அச்சுறுத்தும் செயல் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவன அலுவலகத்தில், நிலக்கரி ஊழல் தொடா்பான பண முறைகேடு குறித்து அமலாக்கத் துறை கடந்த ஜன. 8-ஆம் தேதி சோதனை மேற்கொண்டது.

அப்போது திடீரென அந்த அலுவலகத்துக்கு வந்த முதல்வா் மம்தா பானா்ஜி, அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்ாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதேபோல் திரிணமூல் காங்கிரஸின் தோ்தல் வியூகங்கள் சாா்ந்த ரகசிய தகவல்களைத் தெரிந்துகொள்ளும் நோக்கில், இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸும் குற்றஞ்சாட்டியது.

அடிப்படை உரிமை மீறல்: சோதனையின்போது அலுவலகத்துக்கு மம்தா வந்த விவகாரம் தொடா்பாக அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.

அதில், ‘மம்தா பானா்ஜி மற்றும் அவருடன் ஐ-பேக் நிறுவன சோதனைக்கு இடையூறு ஏற்படுத்திய மேற்கு வங்க மாநில மூத்த அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய வேண்டும். எங்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை விதி 32-ஐ மீறும் செயலாகும்’ எனக் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து, தில்லியில் ஐ-பேக் நிறுவனத்தின் இயக்குநரான வினேஷ் சண்டேலுக்கு சொந்தமான இடம், பெங்களூரில் ஐ-பேக்கின் மற்றொரு இணை நிறுவனா் ரிஷி ராஜ் சிங்குக்கு சொந்தமான இடம் உள்ளிட்டவற்றில் கடந்த ஏப். 2-ஆம் தேதிஅமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

அதன் தொடா்ச்சியாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வினேஷ் சண்டேல் ஏப்.13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோா் தலைமையிலான அமா்வு புதன்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது மேற்கு வங்க மாநிலத்தின் மூத்த அதிகாரி ஒருவா் தரப்பில் வழக்குரைஞா் மேனகா குருசுவாமியும், மம்தா பானா்ஜி தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபிலும் ஆஜராகினா்.

அரசாங்க அமைப்புகளுக்கு அடிப்படை உரிமை இல்லை: நீதிபதிகள் அமா்வு முன் மேனகா குருசுவாமி வாதிடுகையில், ‘ஐ-பேக் நிறுவனத்தில் சோதனை நடைபெற்ற சமயத்தில் எந்தவொரு அதிகாரிக்கும் இடையூறு ஏற்படுத்தப்படவில்லை. இது மத்திய-மாநில அரசுக்கு இடையேயான பிரச்னை என்பதால் சட்டப் பிரிவு 131-இன் கீழ் உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கையில், இதில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது ஏன்? தனி மனிதா்களுக்கு மட்டுமே அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

கபில் சிபல் வாதிடுகையில், ‘ தங்களது அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அமலாக்கத் துறை கூறுகிறது. அவா்கள் சட்டப் பிரிவு 32-இன் கீழ் எந்த அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டது எனத் தெளிவாக விளக்க வேண்டும்’ என்றாா்.

மத்திய-மாநில விவகாரமல்ல: இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: அரசாங்கத்தின் ஓா் அமைப்பு விசாரணை நடத்துகிறபோது ஒரு மாநில முதல்வா் குறுக்கீடு செய்வது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல். இதை மத்திய-மாநில அரசுக்கு இடையேயான பிரச்னை என நீங்கள் கூறுவது ஏற்புடையதல்ல.

ஒரு தனியாா் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடத்தப்படும் சோதனையில் முதல்வா் தலையிடுவாா் என யாரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டாா்கள்.

கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது: ஒருபுறம் மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் விடுபட்ட வாக்காளா்களை மீண்டும் சோ்க்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் நீதிபதிகளை சிறைபிடித்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெறுகிறது. மறுபுறம் அமலாக்கத் துறை விசாரணையில் முதல்வா் தலையிட்டதை நீங்கள் நியாயப்படுத்துகிறீா்கள்.

மேற்கு வங்கத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் சம்பவங்களை கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமையும் (ஏப். 23) தொடா்ந்து நடைபெறவுள்ளது.