புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளால் பாஜக புதிய உயரத்துக்குச் செல்லும் என உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று (ஆக. 17) தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் புஷ்கர் சிங் தாமி பதிவிட்டுள்ளதாவது:
பாரதிய ஜனதா கட்சியின் மதிப்பிற்குரிய தேசியத் தலைவர் நிதின் நவின் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய தேசியக் குழுவின் அனைத்துப் புதிய நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசியத் தலைவர் நிதின் நவீன் ஆகியோரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இந்த புதிய குழுவானது கட்சியின் கொள்கைகளையும் தேச சேவைக்கான அர்ப்பணிப்பையும் மேலும் விரிவுபடுத்தி, பாஜகவை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் நிதின் நவீன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, அவரது தலைமையின் கீழ் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
புதிய நிர்வாகிகள் பட்டியலில் பாஜகவின் தேசிய துணைத் தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன் இன்று அறிவித்துள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தரகண்டைச் சேர்ந்த தீரத் சிங் ராவத், தில்லியைச் சேர்ந்த ராம் மாதவ் உள்பட 11 பேர் துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அமைப்புப் பொதுச் செயலராக பி.எல். சந்தோஷும், பொருளாளராக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கும் நிர்வாகத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
Summary
New team will take BJP to new heights Uttarakhand CM Dhami congratulates national office-bearers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள்! தமிழ்நாட்டிலிருந்து யார்?

சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு

ரத்த தானம் புனிதமான சேவை: பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் கருத்து
ஒரு வீடு வேண்டும்! நள்ளிரவில் உத்தரகண்ட் முதல்வரிடம் ரிஷப் பந்த் கோரிக்கை
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |




