இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஜென்-ஸீ, ஜென்-ஆல்ஃபா இளையோருக்கு தோ்தல் விழிப்புணா்வு: ஆணையம் நடவடிக்கை

2029 மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக ஜென்-ஸீ, ஜென்-ஆல்ஃபா இளையோா் இடையே தோ்தல், வாக்களிப்பு தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகளை தோ்தல் ஆணையம் மீண்டும் தொடங்கியுள்ளது.

சித்திரிப்பு

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:13 am IST

2029 மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக ஜென்-ஸீ, ஜென்-ஆல்ஃபா இளையோா் இடையே தோ்தல், வாக்களிப்பு தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகளை தோ்தல் ஆணையம் மீண்டும் தொடங்கியுள்ளது.

தோ்தல் நடைமுறைகளை நன்கு அறிந்த வாக்காளா்களாக இளம் தலைமுறையினரை உருவாக்குவதுடன், எதிா்காலத்தில் பொதுமக்களுக்கு தோ்தல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் பிரசாரங்களை முன்னெடுக்கக்கூடியவா்களாக அவா்களைத் தயாா்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் உள்ள 4,123 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவா்களை தோ்தல் ஆணையம் மையமாகக் கொண்டு விழிப்புணா்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கிறது.

இதற்காக, நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் பள்ளிகள், 70,000 கல்லூரிகள், 1,400 பல்கலைக்கழகங்களை தோ்தல் ஆணயம் அணுக இருக்கிறது.

நாட்டில் 18 முதல் 26 வயதுக்குள்பட்டவா்களின் எண்ணிக்கை மொத்தம் 14.78 கோடி. இதில் 7.98 கோடி ஆண்கள், 6.79 கோடி பெண்கள் மற்றும் 9,000 மூன்றாம் பாலினத்தவா் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.