மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். செய்திகளை உடனுக்குடன் அறிய.. தினமணி.காம் உடன் இணைந்திருங்கள்!
மத்திய பட்ஜெட் 2026 - 27
மத்திய பட்ஜெட் 2026 - 27DPS

மத்திய பட்ஜெட் நேரலை

வளர்ச்சியை ஊக்குவிக்க முன்மொழியப்படும்  6 துறைகள்!

  • வளர்ச்சியை ஊக்குவிக்க 6 துறைகள் முன்மொழியப்பட்டதாகக் கூறினார்.

  • 7 எல்லைப்புறத் துறைகளில் உற்பத்தியை அளவிடுதல்.

  • பாரம்பரிய தொழில்துறை துறைகளை புத்துயிர் பெறுதல்.

  • சாம்பியனான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை உருவாக்குதல்

  • உள்கட்டமைப்பு உந்துதல்

  • நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல்

  • நகரப் பொருளாதாரப் பகுதிகளை உருவாக்குதல் என வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 6 துறைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

செமிகண்டக்டர் 2.0 வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி!

இந்தியாவின் செமிகண்டக்டர் மிஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஐஎஸ்எம் 1.0 மற்றும் ஐஎஸ்எம் 2.0 மிஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஐபியுடன் செமி கண்டக்டர் உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

செமிகண்டக்டர் 2.0 திட்ட வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பயோ-பார்மா துறைக்கு ரூ.10,000 கோடி

பயோஃபார்மா துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்க மத்திய அரசு முன்மொழிகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

பயோ-ஃபார்மா துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு வர அண்மையில் 350க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீர்திருத்த நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகின்றன என்றார்.

அனைவருக்கும் வளர்ச்சி

எம்எஸ்எம்இ உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்து முக்கியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களின் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இளைஞர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது.

அனைவருக்கும் வளர்ச்சி என்பது மத்திய பட்ஜெட்டின் முக்கிய நோக்கம்.

நிதி அமைச்சகம், தனது கர்த்தவ்ய பவன் அலுவலகத்தில் தயாரித்த முதல் பட்ஜெட் இது.

3 முக்கிய கடமைகள்

3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.

ரூ.10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் உருவாக்கப்படும்.

அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கென வழித்தட திட்டம்

சிறப்பம்சங்கள்

  • மிகச் சரியாக முற்பகல் 11.01க்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.

  • தொடர்ச்சியாக 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

  • சுதந்திர இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

  • தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பட்ஜெட் தாக்கலானது

மிகச் சரியாக முற்பகல் 11.01க்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 - 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

கவனம் ஈர்க்கும் ஓவியம்!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஓவியத்தை வரைந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க...

மத்திய பட்ஜெட் 2026 - 27
மத்திய பட்ஜெட் : கவனம் ஈர்க்கும் நிர்மலா சீதாராமனின் ஓவியம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எம்.பி. நிதி நிர்வாகம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் ஒன்பதாவது மத்திய நிதிநிலை அறிக்கையாகும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் சாதனை படைத்துள்ள அவர் மாநிலங்களவை உறுப்பினர் என்ற வகையில் தன்னைத் தேர்ந்தெடுத்த கர்நாடக மாநிலத்துக்கு தனது எம்.பி. நிதியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய முற்பட்டோம்.

மத்திய பட்ஜெட் 2026 - 27
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எம்.பி. நிதி நிர்வாகம்!

பங்குச் சந்தைகள் சரிவு

2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தை இன்று (பிப். 1) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 296 புள்ளிகளுடனும் நிஃப்டி 122 புள்ளிகளுடன் சரிவுடன் தொடங்கின.

குடியரசுத் தலைவரை சந்தித்த நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.

மத்திய பட்ஜெட்டுக்கான ஒப்புதலைப் பெறும் வகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், நிதியமைச்சக அதிகார்கள் உடன் இருந்தனர்.

நிதியமைச்சக குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்!

வரும்2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மத்திய பட்ஜெட் 2026 - 27
மத்திய பட்ஜெட்: நிதியமைச்சக குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com